Thirukkural

1048

பொருட்பால்குடியியல்நல்குரவு

இன்றும் வருவது கொல்லோ நெருநலும்

கொன்றது போலும் நிரப்பு.

Transliteration:

Indrum Varuvadhu Kollo Nerunalum

Kondradhu Polum Nirappu

AI Explanation

Sign in to generate a highly simplified, context-aware explanation for this Kural powered by AI.

பால் (Section)பொருட்பால்Wealth • Porutpaal
இயல் (Chapter)குடியியல்Miscellaneous • Kudiyiyal
அதிகாரம் (Topic)நல்குரவுPoverty • Nalkuravu

English Translation

The killing Want of yesterday Will it pester me even to-day?

Couplet

And will it come today as yesterday,The grief of want that eats my soul away

Explanation

Is the poverty that almost killed me yesterday, to meet me today too ?

Tamil Commentaries (தமிழ் உரைகள்)

மு.வரதராசனார் உரை

நேற்றும் கொலை செய்தது போல் துன்புறுத்திய வறுமை இன்றும் என்னிடம் வருமோ, (என்று வறியவன் நாள்தோறும் கலங்கி வருந்துவான்).

கலைஞர் மு.கருணாநிதி உரை

கொலை செய்வதுபோல நேற்றுக் கொடுமைப்படுத்திய வறுமை, தொடர்ந்து இன்றைக்கும் வராமல் இருக்க வேண்டுமே என்று வறியவன் ஏங்குவான்.

சாலமன் பாப்பையா உரை

நேற்று என்னைக் கொன்றது போன்ற துன்பத்தைத் தந்த இல்லாமை, இன்றும் கூட வருமோ?.

பரிமேலழகர் உரை

நெருதலும் கொன்றது போலும் நிரப்பு - நெருநற்றும் கொன்றது போன்று எனக்கு இன்னாதவற்றைச் செய்த நல்குரவு; இன்றும் வருவது கொல்லோ - இன்றும் என்பால் வரக்கடவதோ, வந்தால் இனி யாது செய்வேன்? (அவ்வின்னாதனவாவன, மேற்சொல்லிய (குறள்.1045)துன்பங்கள், நெருநல் மிக வருந்தித் தன் வயிறு நிறைத்தான் ஒருவன் கூற்று.).

மணக்குடவர் உரை

இன்றும் வரும்போலும்; நெருநற்றும் என்னைக் கொன்றது போலுற்ற நிரப்பிடும்பை. இது நாடோறும் அச்ச முறுத்து மென்று கூறிற்று. Translation

thirukkural.site