Thirukkural

1013

பொருட்பால்குடியியல்நாணுடைமை

ஊனைக் குறித்த உயிரெல்லாம் நாண்என்னும்

நன்மை குறித்தது சால்பு.

Transliteration:

Oonaik Kuriththa Uyirellaam Naanennum

Nanmai Kuriththadhu Saalpu

AI Explanation

Sign in to generate a highly simplified, context-aware explanation for this Kural powered by AI.

பால் (Section)பொருட்பால்Wealth • Porutpaal
இயல் (Chapter)குடியியல்Miscellaneous • Kudiyiyal
அதிகாரம் (Topic)நாணுடைமைShame • Naanutaimai

English Translation

All lives have their lodge in flesh Perfection has its home in blush

Couplet

All spirits homes of flesh as habitation claim,And perfect virtue ever dwells with shame

Explanation

As the body is the abode of the spirit, so the excellence of modesty is the abode of perfection

Tamil Commentaries (தமிழ் உரைகள்)

மு.வரதராசனார் உரை

எல்லா உயிர்களும் ஊனாலாகிய உடம்பை இருப்பிடமாகக் கொண்டவை, சால்பு என்பது நாணம் என்று சொல்லப்படும் நல்லப் பண்பை இருப்பிடமாகக் கொண்டது.

கலைஞர் மு.கருணாநிதி உரை

உடலுடன் இணைந்தே உயிர் இருப்பது போல், மாண்பு என்பது நாண உணர்வுடன் இணைந்து இருப்பதேயாகும்.

சாலமன் பாப்பையா உரை

எல்லா உயிர்களும் உடம்பை இடமாகக் கொண்டுள்ளன; அதுபோல், சான்றாண்மையும், நாணம் என்னும் நல்ல குணத்தை இடமாகக் கொண்டுள்ளது.

பரிமேலழகர் உரை

உயிர் எல்லாம் ஊனைக் குறித்த - எல்லா உயிர்களும் உடம்பினைத் தமக்கு நிலைக்களனாகக் கொண்டு அதனை விடா

சால்பு நாண் என்னும் நன்மை குறித்தது - அது போலச் சால்பு என்னும் நன்மைக் குணத்தைத் தனக்கு நிலைகளனாகக் கொண்டு, அதனை விடாது. ('உடம்பு' என்பது சாதியொருமை. நன்மை - ஆகுபெயர். உயிர் உடம்போடு கூடியல்லது பயனெய்தாதவாறு போலச் சால்பு நாணோடு கூடியல்லது பயன் எய்தாது என்பதாம். 'ஊணைக் குறித்த' என்று பாடம் ஓதுவாரும் உளர்.

மணக்குடவர் உரை

பலவகை உயிரும் மேற்கூறிய எல்லாவற்றினும் உண்டியைக் கருதிற்று

thirukkural.site