64அமைச்சு
The Office of Minister of state • Amaichchu
The Office of Minister of state • Amaichchu
Read all ten couplets in order with direct links to their full explanation pages.
கருவியும் காலமும் செய்கையும் செய்யும்
அருவினையும் மாண்டது அமைச்சு.
He is minister who chooses Right means, time, mode and rare ventures
வன்கண் குடிகாத்தல் கற்றறிதல் ஆள்வினையோடு
ஐந்துடன் மாண்டது அமைச்சு.
With these he guards people, -by his Knowledge, firmness and manliness
பிரித்தலும் பேணிக் கொளலும் பிரிந்தார்ப்
பொருத்தலும் வல்ல தமைச்சு.
A minister cherishes friends Divides foes and the parted blends
தெரிதலும் தேர்ந்து செயலும் ஒருதலையாச்
சொல்லலும் வல்லது அமைச்சு.
A minister must sift reflect Select and say surely one fact
அறனறிந்து ஆன்றமைந்த சொல்லான்எஞ் ஞான்றுந்
திறனறிந்தான் தேர்ச்சித் துணை.
Have him for help who virtue knows Right wisdom speaks, ever apt in acts
மதிநுட்பம் நூலோடு உடையார்க்கு அதிநுட்பம்
யாவுள முன்நிற் பவை.
Which subtler brain can stand before The keen in brain with learned love?
செயற்கை அறந்தக் கடைத்தும் உலகத்து
இயற்கை அறிந்து செயல்.
Albeit you know to act from books Act after knowing world's outlooks
அறிகொன்று அறியான் எனினும் உறுதி
உழையிருந்தான் கூறல் கடன்.
The man in place must tell the facts Though the ignorant king refutes
பழுதெண்ணும் மந்திரியின் பக்கததுள் தெவ்வோர்
எழுபது கோடி உறும்.
Seventy crores of foes are better Than a minister with mind bitter
முறைப்படச் சூழ்ந்தும் முடிவிலவே செய்வர்
திறப்பாடு இலாஅ தவர்.
The unresolved, though well designed To fulfil an act they have no mind
Quick answers about this adhigaram, its place in the Thirukkural, and the Kurals it contains.
Adhigaram 64 is "The Office of Minister of state" (அமைச்சு). This chapter covers Kurals 631-640.
Adhigaram 64 belongs to the book Wealth (பொருட்பால்) and the division Minister of State (அமைச்சியல்).
This chapter contains 10 Kurals, from Thirukkural 631 to Thirukkural 640.
The opening verse is Thirukkural 631: "கருவியும் காலமும் செய்கையும் செய்யும் அருவினையும் மாண்டது அமைச்சு.". Its English translation begins: "He is minister who chooses Right means, time, mode and rare ventures".