49காலமறிதல்
Knowing the fitting Time • Kaalamaridhal
Knowing the fitting Time • Kaalamaridhal
Read all ten couplets in order with direct links to their full explanation pages.
பகல்வெல்லும் கூகையைக் காக்கை இகல்வெல்லும்
வேந்தர்க்கு வேண்டும் பொழுது.
By day the crow defeats the owl Kings need right time their foes to quell
பருவத்தோடு ஒட்ட ஒழுகல் திருவினைத்
தீராமை ஆர்க்குங் கயிறு.
Well-ordered seasoned act is cord That fortune binds in bon accord
அருவினை யென்ப உளவோ கருவியான்
காலம் அறந்து செயின்.
What is hard for him who acts With proper means and time and tacts?
ஞாலம் கருதினுங் கைகூடுங் காலம்
கருதி இடத்தாற் செயின்.
Choose proper time and act and place Even the world you win with ease
காலம் கருதி இருப்பர் கலங்காது
ஞாலம் கருது பவர்.
Who want to win the world sublime Wait unruffled biding their time
ஊக்க முடையான் ஒடுக்கம் பொருதகர்
தாக்கற்குப் பேருந் தகைத்து.
By self-restraint stalwarts keep fit Like rams retreating but to butt
பொள்ளென ஆங்கே புறம்வேரார் காலம்பார்த்து
உள்வேர்ப்பர் ஒள்ளி யவர்.
The wise jut not their vital fire They watch their time with hidden ire
செறுநரைக் காணின் சுமக்க இறுவரை
காணின் கிழக்காம் தலை.
Bear with hostiles when you meet them Fell down their head in fateful time
எய்தற் கரியது இயைந்தக்கால் அந்நிலையே
செய்தற் கரிய செயல்.
When comes the season ripe and rare Dare and do hard things then and there
கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன்
குத்தொக்க சீர்த்த இடத்து.
In waiting time feign peace like stork In fighting time strike like its peck
Quick answers about this adhigaram, its place in the Thirukkural, and the Kurals it contains.
Adhigaram 49 is "Knowing the fitting Time" (காலமறிதல்). This chapter covers Kurals 481-490.
Adhigaram 49 belongs to the book Wealth (பொருட்பால்) and the division Royalty (அரசியல்).
This chapter contains 10 Kurals, from Thirukkural 481 to Thirukkural 490.
The opening verse is Thirukkural 481: "பகல்வெல்லும் கூகையைக் காக்கை இகல்வெல்லும் வேந்தர்க்கு வேண்டும் பொழுது.". Its English translation begins: "By day the crow defeats the owl Kings need right time their foes to quell".