Thirukkural

410

பொருட்பால்அரசியல்கல்லாமை

விலங்கொடு மக்கள் அனையர் இலங்குநூல்

கற்றாரோடு ஏனை யவர்.

Transliteration:

Vilangotu Makkal Anaiyar Ilangunool

Katraarotu Enai Yavar

AI Explanation

Sign in to generate a highly simplified, context-aware explanation for this Kural powered by AI.

பால் (Section)பொருட்பால்Wealth • Porutpaal
இயல் (Chapter)அரசியல்Royalty • Arasiyal
அதிகாரம் (Topic)கல்லாமைIgnorance • Kallaamai

English Translation

Like beasts before men, dunces are Before scholars of shining lore

Couplet

Learning's irradiating grace who gain,Others excel, as men the bestial train

Explanation

As beasts by the side of men, so are other men by the side of those who are learned in celebrated works

Tamil Commentaries (தமிழ் உரைகள்)

மு.வரதராசனார் உரை

அறிவு விளங்குதற்குக் காரணமான நூல்களைக் கற்றவரோடுக் கல்லாதவர், மக்களோடு விலங்குகளுக்கு உள்ள அவ்வளவு வேற்றுமை உடையவர்.

கலைஞர் மு.கருணாநிதி உரை

மனிதர்களுக்கும் விலங்குகளுக்குமிடையே என்ன வேற்றுமையோ, அதே அளவு வேற்றுமை அறிவு நூல்களைப் படித்தவர்களுக்கும், அந்த நூல்களைப் படிக்காதவர்களுக்கும் இடையே உண்டு.

சாலமன் பாப்பையா உரை

விலங்கை நோக்க மக்கள் எவ்வளவு வேறுபட்டவரோ, சிறந்த நூலைக் கற்றவரை நோக்கக் கல்லாதவர் அவ்வளவு வேறுபட்டவர்.

பரிமேலழகர் உரை

விலங்கொடு மக்கள் அனையர் - விலங்கொடு நோக்க மக்கள் எத்துணை நன்மையுடையர் அத்துணைத் தீமையுடையர்; இலங்கு நூல் கற்றாரோடு ஏனையவர் - விளங்கிய நூலைக் கற்றாரோடு நோக்கக் கல்லாதவர். (இலங்குநூல்

சாதிப் பெயர். விளங்குதல்

மணக்குடவர் உரை

விலங்குச் சாதியோடும் மக்களோடும் உள்ள வேறுபாடுடையர்; விளங்கின நூல்களைக் கற்றவரோடு கல்லாதவர். இது கல்லாதார் விலங்கென்றது. Translation

thirukkural.site