Thirukkural

408

பொருட்பால்அரசியல்கல்லாமை

நல்லார்கண் பட்ட வறுமையின் இன்னாதே

கல்லார்கண் பட் ட திரு.

Transliteration:

Nallaarkan Patta Varumaiyin Innaadhe

Kallaarkan Patta Thiru

AI Explanation

Sign in to generate a highly simplified, context-aware explanation for this Kural powered by AI.

பால் (Section)பொருட்பால்Wealth • Porutpaal
இயல் (Chapter)அரசியல்Royalty • Arasiyal
அதிகாரம் (Topic)கல்லாமைIgnorance • Kallaamai

English Translation

Wealth in the hand of fools is worse Than a learned man's empty purse

Couplet

To men unlearned, from fortune's favour greater-evil springsThan poverty to men of goodly wisdom brings

Explanation

Wealth, gained by the unlearned, will give more sorrow than the poverty which may come upon the learned

Tamil Commentaries (தமிழ் உரைகள்)

மு.வரதராசனார் உரை

கல்லாதவனிடம் சேர்ந்துள்ள செல்வமானது, கற்றறிந்த நல்லவரிடம் உள்ள வறுமையைவிட மிகத்துன்பம் செய்வதாகும்.

கலைஞர் மு.கருணாநிதி உரை

முட்டாள்களிடம் குவிந்துள்ள செல்வம், நல்லவர்களை வாட்டும் வறுமையைவிட அதிக துன்பத்தைத் தரும்.

சாலமன் பாப்பையா உரை

படிக்காதவரிடம் இருக்கும் செல்வம், நல்லவரிடம் இருக்கும் வறுமையைக் காட்டிலும் கொடியது.

பரிமேலழகர் உரை

நல்லார்கண் பட்ட வறுமையின் இன்னாது - கற்றார்மாட்டு நின்ற வறுமையினும் இன்னாது, கல்லார்கண் பட்ட திரு - கல்லாதார் மாட்டு நின்ற செல்வம். (இழிவு சிறப்பு உம்மை விகாரத்தால் தொக்கது. தம்தம் நிலையின் அன்றிமாறி நிற்றலால் தாம் இடுக்கண்படுதலும் உலகிற்குத் துன்பஞ்செய்தலும் இரண்டற்கும் ஒக்குமாயினும், திரு கல்லாரைக் கெடுக்க, வறுமை நல்லாரைக் கெடாது நிற்றலான், 'வறுமையினும் திரு இன்னாது' என்றார். இதனால் அவர் திருவின் குற்றம் கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை

நல்லார்மாட்டு உண்டாகிய வறுமைபோலப் பிறர்க்கு இன்னாமையைச் செய்யும்; கல்லாதார்மாட்டு உண்டாகிய செல்வம். இது செல்வமுண்டாயின், பிறரைத் துன்பமுறுவிப்பரென்றது. Translation

thirukkural.site