Thirukkural
பொருட்பால்அரசியல்கல்லாமை
கல்லாதான் ஒட்பம் கழியநன் றாயினும்
கொள்ளார் அறிவுடை யார்.
Transliteration:
Kallaadhaan Otpam Kazhiyanan Raayinum
Kollaar Arivutai Yaar
✨ AI Explanation
Sign in to generate a highly simplified, context-aware explanation for this Kural powered by AI.
பால் (Section)பொருட்பால்Wealth • Porutpaal
இயல் (Chapter)அரசியல்Royalty • Arasiyal
அதிகாரம் (Topic)கல்லாமைIgnorance • Kallaamai
English Translation
The unread's wit though excellent Is not valued by the savant
Couplet
From blockheads' lips, when words of wisdom glibly flow,The wise receive them not, though good they seem to show
Explanation
Although the natural knowledge of an unlearned man may be very good, the wise will not accept for true knowledge
thirukkural.site
கல்லாதவனுடைய அறிவுடைய ஒருக்கால் மிக நன்றாக இருந்தாலும் அறிவுடையோர் அதனை அறிவின் பகுதியாக ஏற்றுக்கொள்ள மாட்டார்.
கல்வி கற்காதவனுக்கு இயற்கையாகவே அறிவு இருந்தாலும்கூட, அவனைக் கல்வியில் சிறந்தோன் என்று அறிவுடையோர் ஒப்புக் கொள்ள மாட்டார்கள்.
படித்தவர் முன் பேசினால் படிக்காதவரின் பெருமை குறைந்து போகும்.
கல்லாதான் ஒட்பம் கழிய நன்று ஆயினும் - கல்லாதவனது ஒண்மை ஒரோவழி நன்றாயிருப்பினும், அறிவுடையார் கொள்ளார் - அறிவுடையார் அதனை ஒண்மையாகக் கொள்ளார். (ஒண்மை
அறிவுடைமை, அது நன்றாகாது, ஆயிற்றாயினும் ஏரலெழுத்துப் போல்வதோர் விழுக்காடு ஆகலின், நிலைபெற்ற நூல் அறிவுடையார் அதனை மதியார் என்பதாம்.).
கல்லாதானது ஒண்மை மிகவும் நன்றாயிருப்பினும் அதனை ஒண்மையாகக் கொள்ளார் அறிவுடையார். ஒண்மை யெனினும் அறிவெனினும் அமையும். இது கல்லாதார் ஒள்ளியாராயினும் மதிக்கப்படாரென்றது.
கல்லாதவனுடைய அறிவுடைமை ஒரு நேரத்தில் மிக நன்றாக இருந்தாலும் அறிவுடையவர்கள் அதனை அறிவாகக் கொள்ள மாட்டார்கள்.