52தெரிந்து வினையாடல்
Selection and Employment • Therindhuvinaiyaatal
Selection and Employment • Therindhuvinaiyaatal
Read all ten couplets in order with direct links to their full explanation pages.
நன்மையும் தீமையும் நாடி நலம்புரிந்த
தன்மையான் ஆளப் படும்.
Employ the wise who will discern The good and bad and do good turn
வாரி பெருக்கி வளம்படுத்து உற்றவை
ஆராய்வான் செய்க வினை.
Let him act who resource swells; Fosters wealth and prevents ills
அன்பறிவு தேற்றம் அவாவின்மை இந்நான்கும்
நன்குடையான் கட்டே தெளிவு.
Trust him in whom these four you see: Love, wit, non-craving, clarity
எனைவகையான் தேறியக் கண்ணும் வினைவகையான்
வேறாகும் மாந்தர் பலர்.
Though tried and found fit, yet we see Many differ before duty
அறிந்தாற்றிச் செய்கிற்பாற்கு அல்லால் வினைதான்
சிறந்தானென்று ஏவற்பாற் றன்று.
Wise able men with power invest Not by fondness but by hard test
செய்வானை நாடி வினைநாடிக் காலத்தோடு
எய்த உணர்ந்து செயல்.
Discern the agent and the deed And just in proper time proceed
இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து
அதனை அவன்கண் விடல்.
This work, by this, this man can do Like this entrust the duty due
வினைக் குரிமை நாடிய பின்றை அவனை
அதற்குரிய னாகச் செயல்.
His fitness for the duty scan Leave him to do the best he can
வினைக்கண் வினையுடையான் கேண்மைவே றாக
நினைப்பானை நீங்கும் திரு.
Who do duty for duty's sake Doubt them; and fortune departs quick
நாடோ றும் நாடுக மன்னன் வினைசெய்வான்
கோடாமை கோடா துலகு.
Worker straight the world is straight The king must look to this aright
Quick answers about this adhigaram, its place in the Thirukkural, and the Kurals it contains.
Adhigaram 52 is "Selection and Employment" (தெரிந்து வினையாடல்). This chapter covers Kurals 511-520.
Adhigaram 52 belongs to the book Wealth (பொருட்பால்) and the division Royalty (அரசியல்).
This chapter contains 10 Kurals, from Thirukkural 511 to Thirukkural 520.
The opening verse is Thirukkural 511: "நன்மையும் தீமையும் நாடி நலம்புரிந்த தன்மையான் ஆளப் படும்.". Its English translation begins: "Employ the wise who will discern The good and bad and do good turn".