38ஊழ்
Fate • Oozh
Fate • Oozh
Read all ten couplets in order with direct links to their full explanation pages.
ஆகூழால் தோன்றும் அசைவின்மை கைப்பொருள்
போகூழால் தோன்றும் மடி.
Efforts succeed by waxing star Wealth-losing brings waning star
பேதைப் படுக்கும் இழவூழ் அறிவகற்றும்
ஆகலூழ் உற்றக் கடை.
Loss-fate makes a dull fool of us Gain-fate makes us prosperous, wise!
நுண்ணிய நூல்பல கற்பினும் மற்றுந்தன்
உண்மை யறிவே மிகும்.
What matters subtle study deep? Levels of innate wisdom-keep
இருவேறு உலகத்து இயற்கை திருவேறு
தெள்ளிய ராதலும் வேறு.
Two natures in the world obtain Some wealth and others wisdom gain
நல்லவை எல்லாஅந் தீயவாம் தீயவும்
நல்லவாம் செல்வம் செயற்கு.
In making wealth fate changes mood; The good as bad and bad as good
பரியினும் ஆகாவாம் பாலல்ல உய்த்துச்
சொரியினும் போகா தம.
Things not thine never remain Things destined are surely thine
வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி
தொகுத்தார்க்கு துய்த்தல் அரிது.
Who crores amass enjoy but what The Dispenser's decrees allot
துறப்பார்மன் துப்புர வில்லார் உறற்பால
ஊட்டா கழியு மெனின்.
The destitute desire will quit If fate with ills visit them not
நன்றாங்கால் நல்லவாக் காண்பவர் அன்றாங்கால்
அல்லற் படுவ தெவன்?
Who good in time of good perceive In evil time why should they grieve?
ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று
சூழினுந் தான்முந் துறும்.
What power surpasses fate? Its will Persists against the human skill
Quick answers about this adhigaram, its place in the Thirukkural, and the Kurals it contains.
Adhigaram 38 is "Fate" (ஊழ்). This chapter covers Kurals 371-380.
Adhigaram 38 belongs to the book Virtue (அறத்துப்பால்) and the division Fate (ஊழியல்).
This chapter contains 10 Kurals, from Thirukkural 371 to Thirukkural 380.
The opening verse is Thirukkural 371: "ஆகூழால் தோன்றும் அசைவின்மை கைப்பொருள் போகூழால் தோன்றும் மடி.". Its English translation begins: "Efforts succeed by waxing star Wealth-losing brings waning star".