103குடிசெயல் வகை
The Way of Maintaining the Family • Kutiseyalvakai
The Way of Maintaining the Family • Kutiseyalvakai
Read all ten couplets in order with direct links to their full explanation pages.
கருமம் செயஒருவன் கைதூவேன் என்னும்
பெருமையின் பீடுடையது இல்.
No greatness is grander like Saying \"I shall work without slack\"
ஆள்வினையும் ஆன்ற அறிவும் எனஇரண்டின்
நீள்வினையால் நீளும் குடி.
These two exalt a noble home Ardent effort and ripe wisdom
குடிசெய்வல் என்னும் ஒருவற்குத் தெய்வம்
மடிதற்றுத் தான்முந் துறும்.
When one resolves to raise his race Loin girt up God leads his ways
சூழாமல் தானே முடிவெய்தும் தம்குடியைத்
தாழாது உஞற்று பவர்க்கு.
Who raise their races with ceaseless pain No need for plan; their ends will gain
குற்றம் இலனாய்க் குடிசெய்து வாழ்வானைச்
சுற்றமாச் சுற்றும் உலகு.
Who keeps his house without a blame People around, his kinship claim
நல்லாண்மை என்பது ஒருவற்குத் தான்பிறந்த
இல்லாண்மை ஆக்கிக் கொளல்.
Who raise their race which gave them birth Are deemed as men of manly worth
அமரகத்து வன்கண்ணர் போலத் தமரகத்தும்
ஆற்றுவார் மேற்றே பொறை.
Like dauntless heroes in battle field The home-burden rests on the bold
குடிசெய்வார்க் கில்லை பருவம் மடிசெய்து
மானங் கருதக் கெடும்.
No season have they who raise their race Sloth and pride will honour efface
இடும்பைக்கே கொள்கலம் கொல்லோ குடும்பத்தைக்
குற்ற மறைப்பான் உடம்பு.
Is not his frame a vase for woes Who from mishaps shields his house?
இடுக்கண்கால் கொன்றிட வீழும் அடுத்தூன்றும்
நல்லாள் இலாத குடி.
A house will fall by a mishap With no good man to prop it up
Quick answers about this adhigaram, its place in the Thirukkural, and the Kurals it contains.
Adhigaram 103 is "The Way of Maintaining the Family" (குடிசெயல் வகை). This chapter covers Kurals 1021-1030.
Adhigaram 103 belongs to the book Wealth (பொருட்பால்) and the division Miscellaneous (குடியியல்).
This chapter contains 10 Kurals, from Thirukkural 1021 to Thirukkural 1030.
The opening verse is Thirukkural 1021: "கருமம் செயஒருவன் கைதூவேன் என்னும் பெருமையின் பீடுடையது இல்.". Its English translation begins: "No greatness is grander like Saying \"I shall work without slack\"".